
அடுத்த நாள் காலையில் சீக்கிரமே நயன்தாரா எழுந்து விட்டாள். மணி ஆறுதான் இருக்கும். நயன்தாரா படுக்கையில் இருந்து எழுந்து ஜன்னல் பக்கம் போய் வெளியே பார்த்தாள். ஒரே வெட்ட வெளி. யாராவது நடமாடினால் அரை கிலோமீட்டருக்கும் அப்பால் தெரிந்தது.
இவர்களிடமிருந்து தப்பினாலும் அரை கிலோமீட்டர் கண்களில் படாமல் ஓட வேண்டும். வீட்டை முழுதும் சுற்றி வந்து பார்த்தாள். எல்லா பக்கமும் ஒரு புல் பூண்டு இல்லை. இவர்கள் கார் மட்டும் இருந்தது. சாவியை பத்திரமாக ஒளித்துதான் வைத்து இருப்பார்கள்.